Thursday 19 January 2017

ஜல்லிக்கட்டு போராட்ட செய்திகள் 18/01/17 !

ஜல்லிக்கட்டு போராட்ட செய்திகள் 18/01/17 !


48 மணிநேரத்தில் ஜல்லிக்கட்டு முடிவை அறிவிக்காவிட்டால் 20ம் தேதி தமிழகம் முழுவதும் போராட விவசாயிகள் முடிவு.

ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர குடியரசு தலைவர் பிரதமரிடம் தமிழக எம்பிக்கள் நாளை நேரில் சென்று வலியுத்த உள்ளனர்.

சென்னை கலங்கரை விளக்கம் அருகே தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனத்தை கொண்டு வந்து போலீசார் நிறுத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டிற்காக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவை சேர்ந்த பாலு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வாறு கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் போராட்டம் குறித்து தலைமை செயலகத்தில் டிஜிபியுடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை காவல்துறை ஆணையரிடமும் ஆலோசனை நடத்தினார்.

ஜல்லிக்கட்டு போராடத்திற்க்கு  ஆதரவு தெரிவித்து மெரினாவில் நடைபெறும் போராட்டத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் வந்தார். அவர் ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் மேலும் ஜல்லிக்கட்டு போராடத்திற்க்கு ஒரு கோடி வரை நிதியுதவி செய்வதாக உறுதி அளித்தார்.

மாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம் என பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் 3வது நாளாக போராட்டம் மெரினாவில் 2வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம்: சேலம் ஆட்சியர் அலுவலம் அருகே 3000 பேர் திரண்டனர் இரு மாணவர்கள் தீக்குளிக்க முயற்சி.

தமிழர்களிடமிருந்து  சம்பாதிக்கும் நடிகர்கள் PETA அமைப்பிலிருந்து வெளியேறவேண்டும் - இயக்குநர், நடிகர் சேரன்.

மக்களை தாண்டிய கலை, மதம், சட்டம் எதுவுமில்லை எல்லாமே மக்களுக்காகத்தான். நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் - ஹாரிஸ் ஜெயராஜ்.

சென்னை மெரினாவில் போராட்டக்காரர்களுடன் மைலாப்பூர் துணை ஆணையர் ஒலிப்பெருக்கியின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னை சோழிங்கநல்லூரில் போரட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்.

மெரினாவில் நடக்கும் போராட்டத்துக்கு சட்டம் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆதரவு.

சென்னையிலிருந்து மதுரை சென்ற விரைவு ரயிலை விருத்தாசலத்தில் மறித்து மாணவர்கள் போராட்டம்.

புதுச்சேரியில் வரும்  வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் நடத்த திட்டம்.

சென்னை ஆவடியில் தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்கு பாலத்தில் அமர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றால் கடலில் குதிப்போம் என போராட்டக்காரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை இடையேயான சுங்கச்சாவடியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டு க்காக போராட்டம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்கு பாலத்தில் அமர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றால் கடலில் குதிப்போம் என போராட்டக்காரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் போராட்டம்.

ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கு சேவாக் ஆதரவு.

அலங்காநல்லூரில் ஐல்லிகட்டு நடத்தகோரி மற்றும் பீட்டாவை தடை செய்யகோரியும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ்நிலையம் முன்பு   200க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் பிஎஸ்.என்.ஏ எஸ்.எஸ்.எம்.. அண்ணா யூனிவர்சிட்டி ஏ.பி.சி.காலேஜ். சுமார் 4000 மாணவர்கள் பேரணியாக திண்டுக்கல் வந்தனர் பிட்டாவை எதிர்த்து போஸ்டருடன் வந்தனர்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் முன்பாக ஜல்லிக்கட்டு போராட்டம்.

தேனி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு முன்பாக தரையில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  பீட்டாவை எதிர்த்து போராட்டம்.

சென்னை ஆவடியில் தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திண்டிவனத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராட்டம்.

நிலக்கோட்டையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி வழக்கறிஞர்கள் தொடர் மூன்று நாள் நீதிமன்ற புறக்கணிப்பு.

தருமபுரி மாவட்டம். பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு ஜல்லிகட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் பதாதைகள் ஏந்தி போராட்டம்.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் த‌மிழ் ச‌முதாய‌ வாலிப‌ர்க‌ள் கூட்ட‌மைப்பு சார்பாக‌ பீட்டாவிற்கு எதிராக‌வும், ஜ‌ல்லிக்க‌ட்டிற்கு ஆத‌ர‌வாக‌வும் ஆர்ப்பாட்ட‌ம்.

ஜ‌ல்லிக்க‌ட்டு ந‌ட‌த்த‌ கோரியும், பீட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொடைக்கான‌ல் வ‌க்கீல்க‌ள் நீதிம‌ன்ற‌த்தை புற‌க்க‌ணித்து போராட்ட‌ம்.

பழனியில் பேருந்து நிலையம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு.

கிருஷ்ணகிரி இளைஞர்கள் சார்பாக சல்லிகட்டை நடத்தக்கோரி கன்டன ஆர்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடந்தது.

ஒட்டன்சத்திரம் சற்று முன் கிரிஸ்டின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு தடை நீக்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம்200பேர்க்கு மேல் பங்குயேற்பு இப்போது ஊர்வலம் செல்கின்றனர் இவர்கள் திண்டுக்கல்லும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்புதாக தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஜல்லிக்கட்டு நடத்த  மத்திய மாநில அரசை வலியுறுத்தி நத்தம் வழக்கறிஞர் இன்று முதல் மூன்று நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக புதுச்சேரியில் வரும் 20ம் தேதி முழு அடைப்புக்கு மாணவர்கள் அழைப்பு.

40 கல்லூரிகளின் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக திரண்டனர் சென்னையை அதிர வைக்கும் போராட்டம்.

கரூரில் கல்லூரி மாணவர்கள்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  சுமார் 1000 மேற்பட்ட மாணவ, மாணவிகள் திறளாக பங்கேற்பு.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தூய நெஞ்ச கல்லூரி மாணவர்கள் ஜல்லிகட்டு ஆதரித்து போராட்டம்.

தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனக்கு அங்கீகாரமும், அடையாளமும் அளித்த இந்த மண்ணுக்கும்,  தமிழ்  மக்களின் உணர்வுக்கு என்றும் துணை நிற்பேன் : நடிகை நயன்தாரா 


மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த திமுகவினர் மீது இளைஞர்கள் தண்ணீர் பாக்கெட்களை வீசினர்.திருச்சியில் நேருவிற்கும், கிருஷ்ணகிரியில் சுகவனத்திற்க்கும், நாமக்கல்லில் இளங்கோவனுக்கும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு.

ஜல்லிக்கட்டு வலியுறுத்தி இன்று பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை சந்திக்க தென்னிந்திய பொது செயலாளர் நடிகர் விஷால் இன்று இரவு புதுடில்லி செல்கிறார்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரி கல்லூரி வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்  நல்லூர் ஆலய முன்றலில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் பீட்டா அமைப்புக்கு பாடை கட்டி ஊர்வலமாக சென்று இளைஞர்கள் போராட்டம்.

ஜல்லிக்கட்டு வலியுறுத்தி நடைபெறும் இளைஞர்கள் போராட்டத்துக்கு நடிகை கவுதமி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடிவரும் இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று நடிகை கவுதமி கூறியுள்ளார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்.

ஜல்லிகட்டு போராட்டம்  ஈரோட்டில் மாணவர்கள் போராட்டம் - கலெக்டரின் பேச்சுவார்த்தை தோல்வி.
 
துபாய் பொங்கல் கொண்டாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த தமிழர்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.