Monday, 23 January 2017

PETA- People for the ethical treatment of animals ?.

🐕 *PETA- People for the ethical treatment of animals* என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. 

அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.

_(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா._

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.

அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். 

*அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.*

இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

*அதிர்ச்சி அடைய வேண்டாம்...*
*35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!*

*இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...*

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!

அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!

*'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!* 🌬

🐱🐕 *பீட்டா - மிருகவதை வியாபாரம்*

*அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?*

அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!

அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.

*எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.*

*பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள்*அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.
சரி.

அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.

நிறைய இருக்கின்றன.
ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. 
( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.

போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!

*சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?*

_பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !_

நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.

பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.

நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். 
அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.

காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.

இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.

*பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு?*
என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?

*மூன்றரை இலட்சம் கோடிகள்!*
*சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?*

இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. 
அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.

அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.

இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.

சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.
ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.

வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!

எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. 
கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.

*உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.*

*அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.* 🐄

ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.

அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !

*பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்...*                        _www.legalfirm.in_

Saturday, 21 January 2017

நாளை மதியம் ஒரு மணி அளவில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அறிவிக்க போகின்றது

*சற்று* *முன்* *கிடைத்த* *தகவல்*.



என் இனிய தமிழக இளைஞர்களே..நாளை மதியம் ஒரு மணி அளவில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அறிவிக்க போகின்றது.இதை அறிவித்த பின்னர் யாரும்  உற்சாகத்தில் போராட்டத்தை நிறுத்திவிட்டு கூட்டத்தை களைக்க வேண்டாம்.அப்படி நாம் இந்த கூட்டத்தை களைத்தால் நாம் நிணைத்தால் கூட மீண்டும் இந்த மாபெரும் கூட்டத்தை சேர்க்க இயலாது.இந்த அறிவிப்பில் ஒரு மாபெரும் சதி அடங்கியுள்ளன.பீட்டா இயக்கத்தை காப்பாற்ற மத்திய அரசு வெளியிடும் அறிவிப்பாகும்.மேலும் இந்த அறிவிப்பு நிறந்திரமானவை அல்ல.நம்மை ஏமாற்றுவதற்காக செய்யும் செயலாகும்.நாம் நடத்தும் போராட்டம் உண்மையானால்,நாம் தமிழன் என்பது உண்மையானால்,மாடுகளை  நாம் தெய்வமாக கருதுவது உண்மையானால் பீட்டா இயக்கத்தை நம் நாட்டிலிருந்து தடை செய்து,ஜல்லிக்கட்டு நடத்த நிறந்திர சட்டத்தை கொண்டு வரும்வரை மேலும் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு கைவிடாமல் போராடுவோம்.....


முடிந்தவரை அறிவிப்பிற்கு முன்பு போராடும் அனைத்து தமிழக இளைஞர்களிடம் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்..... இல்லையென்றால் நாம் போராடிய போராட்டத்திற்கு பயனில்லை....



- தமிழன்

Thursday, 19 January 2017

Jallikattu can help with preservation of native breeds

 I have had doubts related to how Jallikattu can help with preservation of native breeds and why can't breeders raise these even without events like Jallikattu. I was curious and enquired many people who were supporting Jallikattu. The answers that I got like it helps with financing the bull were not convincing. The only convincing answer in favor of Jallikattu was that it must be held for cultural reasons which most of the people parroted. But none of them were able to point me out to the actual reasons why this was beneficial. The videos that I was pointed out to described in great detail the advantages of A2 milk and how the preservation of native breeds which have the gene for producing A2 milk is important but none of them addressed the important question - How does Jallikattu help in their preservation and what is in it for native breeders. After seeing Senapathy's replies in an interview and after talking to Raja Manickam, I have finally managed to convince myself that Jallikattu is not just important from a cultural point of view but is more important from a farmer's point of view as it helps in preservation of native breeds. Here is my summary of how it helps. It is a long read but it will help the majority of those youngsters who are seeking such answers themselves and would enable them to be in a better position to defend the practice. 

A little bit of background is necessary before understanding this. 

There are two types of beta-casein protein which are the dominant casein proteins in cow's milk: A1 and A2 protein. Initially all cows produced milk rich in A2 protein. But 5000 years back when migration started happening to Europe, a genetic mutation caused cattle taken to Europe to produce milk where both A1 and A2 protein were present in approximately equal amounts or where A1 protein dominated. Most of the breeds in Europe, US and Australia produce milk rich in A1 protein while native breeds in Asia and Africa produce milk rich in A2 protein. But after effects of colonization and artificial insemination caused these differences to disappear and interbreeding of cattle resulted in cows' milk in Asia and Africa to also have both proteins. But pure breeds (ones with A2 milk) still do exist in Asia and Africa. 

Scientific research has established the differences in the way the human digestive system (and digestive enzymes) processes these two proteins. The digestive enzymes react to these proteins very differently. Based on these differences, many research articles have arrived at the conclusion (not established beyond reasonable doubt) that A1 milk protein could be the cause for various chronic diseases like type-1 diabetes and so on. There exists research to the contrary as well i.e. there is no correlation between A1 protein and chronic diseases. But the majoritarian view at the moment is that A2 milk is more beneficial than A1 milk.

There is one more important point to be made here. When we interbreed a bull and a cow (and if one or both of them were an offspring of a cow that produced milk rich in A1 protein) then the new offspring will also have this trait. It has been scientifically proven that the gene which causes cows to produce milk rich in A1 protein is a dominant gene and hence all offsprings will also have this trait. 

In India there are 37 native breeds (there were 150 a century ago) and of these 36 have the A2 protein gene in them. The only breed Malvi (common in Maharashtra) has the gene for A1 protein. But this bull is mostly used for ploughing and cows bred with this bull are average milk producers and hence not a cause for major concern. That essentially means that all the 6 native breeds found in Tamilnadu have the A2 protein gene in them which makes it all the more important for us to preserve them. 

Now before we address why Jallikattu helps in preserving native breed, let us understand what will happen if all these native breeds become extinct. We will then have to interbreed and rely heavily on artificial insemination. I have already mentioned the problems with inter breeding above. Artificial insemination is an expensive process and we rely on semen imported from countries like US, Australia, Denmark and New Zealand from Jersey bulls and other such breed known to have A1 protein as the dominant gene. This essentially means that our generation and future generation will then have to live with milk rich in A1 protein and also the associated problems like type1 - diabetes, autism and so on. The other disadvantage with artificial insemination is that the offspring will not be healthy as its genetic pool lacks the genes that are required for it to adapt to the climate and local changes which a native breed has in a higher proportion.

Now this brings into picture an MNC, A2 Milk Company with presence in US, Australia and New Zealand. This company holds patents for trivial things like genetically testing whether a cow has an A1 gene or A2 gene. But what is disturbing is the patent that they hold for artificial insemination of A2 gene bull's semen. They hold the patent for this method which causes A2 gene to become the dominant gene as opposed to A1 which happens naturally. It suppresses the dominant tendency of A1 gene. Now if all native breeds in India were destroyed then we may have to either make do with A1 milk or we may have to pay a hefty royalty to A2 Milk company for using its patented technique to produce cows rich in A2 gene. Now this is what is bothering most of these cattle breeders in TamilNadu. The question that is being raised is that when our breeds are perfectly capable of producing A2 milk, why must be force ourselves to be a slave to some other MNC company holding a patent for this. They also accuse this MNC of funding PETA which is unsubstantiated. But this organisation has been donating generously to PETA in US, Australia and New Zealand which is suspicious but doesn't establish that they are behind the protest in India.

Now let us address why Jallikattu helps in preserving our native breed (I got this information from Senapathy and Raja Manickam). 

In TamilNadu, breeders rear bulls with the intention of showcasing them in Jallikattu. Most of the farmers can't afford to raise these bulls and are hence reliant on these breeders or on the common temple bull which is reared by the entire village rather than a single breeder. The bulls that fare well in the Jallikattu arena are in constant demand for servicing the cows. So we can think of Jallikattu as a marketplace for these bulls. Now this still doesn't answer as to why Jallikattu alone can help in this and why can't breeders breed these native bulls irrespective of whether Jallikattu happens or not.

To understand that we will have to understand the chronology of events that lead to Jallikattu and events that happen thereafter. Jallikattu is held during Pongal time (i.e. mid January), the strong bulls are identified and mated with cows. After this the farming season starts. After harvesting is done, this cycle starts again where the breeders showcase their bulls in Jallikattu events. People with a keen eye for this then make note of the strongest bulls and then seek them out later in what is known as a sandhai (marketplace) in Tamil

Now how does Jallikattu help in the process? The bulls used for mating need to be virile. During the mating season (which is typically after Pongal), these bulls need to be at the top of their game i.e. they must be secreting all the necessary male hormones, experience adrenaline rush and also a fast beating heart. This is where Jallikattu comes in picture. The time when the bull is released from the Vaadi Vaasal (the small narrow gate from which the bulls are released) and till the time it manages to reach the other end (if it is not subdued) causes it to experience a great adrenaline rush which then boosts it's testosterone levels and also keeps its heart beating at a rate faster than normal levels. This increases their virility and this is one of the most fundamental of all necessities for selective breeding. Can this be done without an activity like Jallikattu? Possibly but then the number of matings a bull can accomplish decreases significantly. Jallikattu helps in increasing this which is of utmost importance to a farmer's wellbeing. Also because artificial insemination is not adapted for native breeds, the banning of an event like Jallikattu will lead to these native breeds getting destroyed which would then force our hands to rely on artificial insemination the very process which the farmers shunned to begin with.

In places where events like Jallikattu are not held, the male calves (which are essentially useless unless there is demand for tasks like ploughing) are slaughtered. but in places where Jallikattu is held, these calves are held on to for the purpose of showcasing them and establishing their superiority. 

Now that convinces me of the necessity for an event like Jalikattu.  Now I can truly empathise with these farmers and their struggle to retain this cultural event.

 Worth reading 👆

ஏறுதழுவுதல் தொடரட்டும்/ பீட்டா ஒழியட்டும்.

*முக்கிய அறிவிப்பு:*

*நண்பர்களே.., நாங்கள் இப்படி உயிர் கொடுத்து மெரினாவில் போராடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அரசோ, அடுத்த வாரம் நடக்கவிருக்கும் இந்திய குடியரசு தின விழாவிற்கான ஒத்திகைக்காக மெரினா கடற்கரையை தயார்படுத்த ஆயத்தமாகிவிட்டார்கள்.*



*எங்களைத் துரத்த ஆயிரக்கணக்கானக் காவலர்களை இறக்கியுள்ளனர். அப்படி நடந்துவிட்டால் இரண்டு நாட்களாக போராடியது வீணாகிவிடும். எனவே, சென்னையிலுள்ள அனைவரும் உடனே மெரினா வரவும். அரசு பத்தாயிரம் காவலர்களை இறக்கினால் நாம் பத்து இலட்சம் பேர் கூட வேண்டும்.*

*நமது ஒற்றுமையைக் கண்டு இந்த மானங்கெட்ட அரசுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.*

*உடனே இந்த தகவலை எல்லா ஊடகங்களிலும் பரப்பவும்.*

*ஏறுதழுவுதல் தொடரட்டும்/ பீட்டா ஒழியட்டும்.*

*#தமிழன்டா*


ஜல்லிக்கட்டு போராட்ட செய்திகள் 18/01/17 !

ஜல்லிக்கட்டு போராட்ட செய்திகள் 18/01/17 !


48 மணிநேரத்தில் ஜல்லிக்கட்டு முடிவை அறிவிக்காவிட்டால் 20ம் தேதி தமிழகம் முழுவதும் போராட விவசாயிகள் முடிவு.

ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர குடியரசு தலைவர் பிரதமரிடம் தமிழக எம்பிக்கள் நாளை நேரில் சென்று வலியுத்த உள்ளனர்.

சென்னை கலங்கரை விளக்கம் அருகே தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனத்தை கொண்டு வந்து போலீசார் நிறுத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டிற்காக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவை சேர்ந்த பாலு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வாறு கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் போராட்டம் குறித்து தலைமை செயலகத்தில் டிஜிபியுடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை காவல்துறை ஆணையரிடமும் ஆலோசனை நடத்தினார்.

ஜல்லிக்கட்டு போராடத்திற்க்கு  ஆதரவு தெரிவித்து மெரினாவில் நடைபெறும் போராட்டத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் வந்தார். அவர் ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் மேலும் ஜல்லிக்கட்டு போராடத்திற்க்கு ஒரு கோடி வரை நிதியுதவி செய்வதாக உறுதி அளித்தார்.

மாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம் என பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் 3வது நாளாக போராட்டம் மெரினாவில் 2வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம்: சேலம் ஆட்சியர் அலுவலம் அருகே 3000 பேர் திரண்டனர் இரு மாணவர்கள் தீக்குளிக்க முயற்சி.

தமிழர்களிடமிருந்து  சம்பாதிக்கும் நடிகர்கள் PETA அமைப்பிலிருந்து வெளியேறவேண்டும் - இயக்குநர், நடிகர் சேரன்.

மக்களை தாண்டிய கலை, மதம், சட்டம் எதுவுமில்லை எல்லாமே மக்களுக்காகத்தான். நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் - ஹாரிஸ் ஜெயராஜ்.

சென்னை மெரினாவில் போராட்டக்காரர்களுடன் மைலாப்பூர் துணை ஆணையர் ஒலிப்பெருக்கியின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னை சோழிங்கநல்லூரில் போரட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்.

மெரினாவில் நடக்கும் போராட்டத்துக்கு சட்டம் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆதரவு.

சென்னையிலிருந்து மதுரை சென்ற விரைவு ரயிலை விருத்தாசலத்தில் மறித்து மாணவர்கள் போராட்டம்.

புதுச்சேரியில் வரும்  வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் நடத்த திட்டம்.

சென்னை ஆவடியில் தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்கு பாலத்தில் அமர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றால் கடலில் குதிப்போம் என போராட்டக்காரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை இடையேயான சுங்கச்சாவடியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டு க்காக போராட்டம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்கு பாலத்தில் அமர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றால் கடலில் குதிப்போம் என போராட்டக்காரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் போராட்டம்.

ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கு சேவாக் ஆதரவு.

அலங்காநல்லூரில் ஐல்லிகட்டு நடத்தகோரி மற்றும் பீட்டாவை தடை செய்யகோரியும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ்நிலையம் முன்பு   200க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் பிஎஸ்.என்.ஏ எஸ்.எஸ்.எம்.. அண்ணா யூனிவர்சிட்டி ஏ.பி.சி.காலேஜ். சுமார் 4000 மாணவர்கள் பேரணியாக திண்டுக்கல் வந்தனர் பிட்டாவை எதிர்த்து போஸ்டருடன் வந்தனர்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் முன்பாக ஜல்லிக்கட்டு போராட்டம்.

தேனி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு முன்பாக தரையில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  பீட்டாவை எதிர்த்து போராட்டம்.

சென்னை ஆவடியில் தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திண்டிவனத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராட்டம்.

நிலக்கோட்டையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி வழக்கறிஞர்கள் தொடர் மூன்று நாள் நீதிமன்ற புறக்கணிப்பு.

தருமபுரி மாவட்டம். பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு ஜல்லிகட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் பதாதைகள் ஏந்தி போராட்டம்.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் த‌மிழ் ச‌முதாய‌ வாலிப‌ர்க‌ள் கூட்ட‌மைப்பு சார்பாக‌ பீட்டாவிற்கு எதிராக‌வும், ஜ‌ல்லிக்க‌ட்டிற்கு ஆத‌ர‌வாக‌வும் ஆர்ப்பாட்ட‌ம்.

ஜ‌ல்லிக்க‌ட்டு ந‌ட‌த்த‌ கோரியும், பீட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொடைக்கான‌ல் வ‌க்கீல்க‌ள் நீதிம‌ன்ற‌த்தை புற‌க்க‌ணித்து போராட்ட‌ம்.

பழனியில் பேருந்து நிலையம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு.

கிருஷ்ணகிரி இளைஞர்கள் சார்பாக சல்லிகட்டை நடத்தக்கோரி கன்டன ஆர்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடந்தது.

ஒட்டன்சத்திரம் சற்று முன் கிரிஸ்டின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு தடை நீக்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம்200பேர்க்கு மேல் பங்குயேற்பு இப்போது ஊர்வலம் செல்கின்றனர் இவர்கள் திண்டுக்கல்லும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்புதாக தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஜல்லிக்கட்டு நடத்த  மத்திய மாநில அரசை வலியுறுத்தி நத்தம் வழக்கறிஞர் இன்று முதல் மூன்று நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக புதுச்சேரியில் வரும் 20ம் தேதி முழு அடைப்புக்கு மாணவர்கள் அழைப்பு.

40 கல்லூரிகளின் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக திரண்டனர் சென்னையை அதிர வைக்கும் போராட்டம்.

கரூரில் கல்லூரி மாணவர்கள்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  சுமார் 1000 மேற்பட்ட மாணவ, மாணவிகள் திறளாக பங்கேற்பு.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தூய நெஞ்ச கல்லூரி மாணவர்கள் ஜல்லிகட்டு ஆதரித்து போராட்டம்.

தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனக்கு அங்கீகாரமும், அடையாளமும் அளித்த இந்த மண்ணுக்கும்,  தமிழ்  மக்களின் உணர்வுக்கு என்றும் துணை நிற்பேன் : நடிகை நயன்தாரா 


மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த திமுகவினர் மீது இளைஞர்கள் தண்ணீர் பாக்கெட்களை வீசினர்.திருச்சியில் நேருவிற்கும், கிருஷ்ணகிரியில் சுகவனத்திற்க்கும், நாமக்கல்லில் இளங்கோவனுக்கும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு.

ஜல்லிக்கட்டு வலியுறுத்தி இன்று பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை சந்திக்க தென்னிந்திய பொது செயலாளர் நடிகர் விஷால் இன்று இரவு புதுடில்லி செல்கிறார்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரி கல்லூரி வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்  நல்லூர் ஆலய முன்றலில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் பீட்டா அமைப்புக்கு பாடை கட்டி ஊர்வலமாக சென்று இளைஞர்கள் போராட்டம்.

ஜல்லிக்கட்டு வலியுறுத்தி நடைபெறும் இளைஞர்கள் போராட்டத்துக்கு நடிகை கவுதமி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடிவரும் இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று நடிகை கவுதமி கூறியுள்ளார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்.

ஜல்லிகட்டு போராட்டம்  ஈரோட்டில் மாணவர்கள் போராட்டம் - கலெக்டரின் பேச்சுவார்த்தை தோல்வி.
 
துபாய் பொங்கல் கொண்டாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த தமிழர்கள்.

PETA அமைப்பை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

PETA என்ற அமைப்பை
பற்றி தெரிந்துகொள்ளுங்கள்


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக் காலத்தடை விதித்திருக்கும் இந்த வேளையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த PETA என்ற அமைப்பு பற்றி நாம் தெரிந்து  கொள்வது அவசியம்.

யார் இந்த PETA?
 
PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என  தன்னைப் பதிவு செய்து கொண்டது.
 
(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.
 
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.
 
அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.
 
இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி அடைய வேண்டாம்...35000.  ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!! இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள்  நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...
 
நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
 
கொம்பைப் பிடிக்கிறாய்!
 
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
 
அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
 
'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!
 
பீட்டா - மிருகவதை வியாபாரம்
 
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?
 
அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா?  இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!
 
அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.
 
எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
 
பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை. சரி. அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.
 
நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.
 
போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!
 
சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?
 
பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
 
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.
 
பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.
 
நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.
 
காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.
 
இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.
 
பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.
 
தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே? மூன்றரை இலட்சம் கோடிகள்!
 
சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?
 
இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.
 
இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை. சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும். ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.
 
வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!
 
எனவேதான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை  இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.
 
உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.
 
அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட  பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.
 
அதனால்தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !
 
பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்


Jallikattu _ தமிழகம் - தலை நிமிர்ந்தது

இன்று இளைஞர்களால் ....


மெரினா - மிரண்டது 
அலங்காநல்லூர் - அலறியது 
சிவகங்கை - சீறியது 
தஞ்சை - தகர்ந்தது 
திருநெல்வேலி - திணறியது 
சிதம்பரம் - சிதறியது 
 O.M.R - உயர்ந்தது 
கோவை - கொண்டாடியது 
விருதுநகர் - விளையாடியது 
ராமநாதபுரம் - ரணகளமானது 
பெரம்பலூர் - பெண்டு கழண்டது
தேனி - தெறித்தது 
திருப்பூர் - திருந்தியது  
பொள்ளாச்சி - பொளந்துகட்டியது
வேலூர் - வேட்டையாடியது 
காஞ்சிபுரம் - கர்ஜித்தது 
நாகை - நடுங்கியது 
திருவள்ளூர் - திமிறியது 
அரியலூர் - அமர்க்களமானது
புதுக்கோட்டை - புறப்பட்டது 
திருச்சி - திருப்பு முனையாகியது 
நீலகிரி - நின்றது 
ஈரோடு - எழுந்தது 
நாமக்கல் - நடனமாடியது 
சேலம் - செழித்தது 
திருவாரூர் - திளைத்தது 
திருவண்ணாமலை - திருவிழாவாகியது 
தர்மபுரி - தத்தளித்தது 
கரூர் - கலக்கியது 
கிருஷ்ணகிரி - கிறுகிறுத்தது
கன்னியாகுமரி - கரகாட்டமாடியது 
விழுப்புரம் - வீறுகொண்டது 
திண்டுக்கல் - திசை மாறியது 
மதுரை - மலர்ந்தது 

தமிழகம் - தலை நிமிர்ந்தது!

Jallikattu Protest Day 2

மெரீனா - Day 2

Jallikattu Protest Day 2

1) நேத்திக்கு 2000 பேர்னா, இன்னிக்கு 2 லட்சம் பேர்.

2) நடிகர், நடிகைகளில் இருக்கும் விளம்பரம் தேடிகள் எவனையும் கூட்டத்துக்குள் விடவில்லை. 'அவர்களை பேட்டி எடுக்கும் மீடியா, செல்பி எடுக்குறவன் எல்லாம் பேரிகேட்டுக்கு அந்தப்பக்கம் போ'ன்னு சொல்லிட்டாய்ங்க :)

3) 'நேத்து வரைக்கும் நாங்க மட்டும்தான இருந்தோம். அப்ப எங்க போனீங்க'ன்னு கேக்கவும் க்ரவுட் அப்ளாஸ்.

4) குடும்பப் பஞ்சாயத்து செய்கிற லட்சுமி ராமகிஸ்ணன் தேடி வந்து பல்பு வாங்கிவிட்டு சென்றார்.

5) கோட்டு போட்டு உள்ளே வந்து மைக் பிடிக்க நினைத்த ஹைகோர்ட் வக்கீல்களுக்கும் வாட்ஸ் குறையாமல் அதே பல்பு. 

6) விஜயகாந்த் குரலில், மிமிக்ரி செய்த ஒருவர் பீட்டாவையும், கட்சிகளையும் கழுவி ஊத்தி அப்ளாஸ் அள்ளினார்.

7) ஓரமாய் கழுத்தில் கட்டோடு இருந்த லாரன்ஸை மட்டும் உள்ளே அனுமதித்து மைக் கொடுத்தார்கள். அருமையாகப் பேசினார். கடைசியில் கையில் இருந்த 1 லட்ச ரூபாயைத் தூக்கி காண்பித்து 'பேங்க்ல இவ்ளோதான் எடுக்க முடிஞ்ச்சு. நான் போராட்டம் முடியுற வரை இங்கதான், உங்ககூடத்தான் இருப்பேன். என்ன வேணாலும் என்கிட்ட கூச்சப்படாம கேளுங்க. இது நீங்க குடுத்த காசு" ன்னார். விசில் பறந்தது. மன்சூர் அலிகான் அலம்பலே இல்லாமல் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டார்.

8) இரண்டு கைகளும் இழந்த 5-6 வயது சிறுவனை தோளில் தூக்கிக் கொண்டு ஒருவர் உள்ளே வர கூட்டம் ஆர்ப்பரித்தது. அந்தச் சிறுவனின் சட்டையில் 'We Do Jallikkattu' என்று எழுதியிருந்தது.

9) சாப்பாடு, லெமன் ரைஸ், வாட்டர் பாக்கெட், சாத்துக்குடி என்று வரிசையாக சப்ளை செய்தார்கள்.

10) அவ்வப்போது சோஷியல் மீடியாவின் மூலம் வரும் தகவல்களை பகிர்ந்தபடி இருந்தார்கள். அப்போது மைக்கில் பேசியவர், 'நெட்வர்க் சரியில்ல. போலீஸ்கார்அந்த ஜாம்மரை எடுத்துருங்க' னு சொல்லவும் கூட்டத்தில் குபீர் சிரிப்பு.

11) இவர்தான் நம்ம சூ சூ சூனா சாமியை மானாவாரியா திட்டியவர் என்று ஒருவரை அறிமுகம் செய்தார்கள்.

12) ஓபிஎஸ், மோடி படங்களை தூக்கி கத்தியவர்களை, நமது நோக்கம் இதுவல்ல என்று சொல்லி இறக்க சொல்லிவிட்டார்கள். கொடும்பாவி எரிப்புக்கும் ஸ்டிரிக்ட் நோ.

13) 'பாப்பியா பாப்பியா விசாலு படம் பாப்பியா', 'குடிப்பியா குடிப்பியா கோக்கோ கோலா குடிப்பியா', 'பறந்தியே பறந்தியே நாடு நாடா பறந்தியே', 'சின்னம்மா சின்னம்மா மீனு வாங்கப் போலாமா', 'மீசையத்தான் முறுக்கு பீட்டாவை நொறுக்கு' இவையெல்லாம் ஹைலட் கோஷங்கள். ( சென்சார் கட் நிறைய :))

14) சோழிங்கநல்லூரில் லத்தி சார்ஜ் என்ற செய்தி வந்தவுடன், வன்முறை கூடாது, மிகப்பொறுமையாக இருக்க வேண்டும், நம் வழி அறவழி என்று சொல்லி மிகமிக கவனமாக இருந்தார்கள். 

15) நேத்து சாயங்காலம் வரை ஒரே ஒரு மீடியா வேன் மட்டுமே இருந்தது. இன்று மொத்த நேஷனல் மீடியாவும் விவேகானந்தர் இல்லம் எதிரே. கிரேன் கேமரலாம் இருந்துச்சுபா.

16) பின்னால் இருந்தவன் 'பாஸு..கேமரால மட்டும் என் மூஞ்சி தெரியாம பாத்துக்கங்க பாஸு. ஆபிஸ்ல லீவு போட்டு வந்துருக்கேன்' என்றான். 'ஊரே பாத்துருக்குமேடா' என்றவுடன் 'அய்யய்யோ' என்றான்.

17) திருவல்லிக்கேணி ரயில்வே ஸ்டேசனில் நான் இவ்வளவு கூட்டம் இதுவரையில் பார்த்ததில்லை. முன்பு ஒருமுறை பீச்சில் தேமுதிக மாநாடு நடந்த போதுகூட இவ்வளவு கூட்டமில்லை.

18) ஆட்டோவில் சென்ற ஸ்கூல் சுள்ளான்கள் சிலபேர் 'வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்' என்று சார்ட்டை காண்பித்து கத்தினார்கள். ஒரு வெசப்பயபுள்ள மட்டும் 'ஐஸ்மோர் வேண்டும்' என்று கத்தினான்.

19) கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்ல, இளைஞர்கள் ரோட்டில் இறங்குவதைத் தடுக்க, மைக்கில் பேசியவன் " பின்னாடி போ நண்பா. கடல் வரைக்கும் போகலாம். நம்மகிட்ட கூட்டம் இருக்கு" என்று சிரித்தபடி சொன்னது அல்டிமேட்.

20) தாகம் தீர்க்க கூட்டத்தினுள் அனுப்பப்பட்ட லிம்கா பாட்டில் தூக்கி எறியப்பட்டது

21) இந்த இனத்தின் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகளுக்காக போராடுகிறார்கள். கைக்குழந்தைகளோடு இரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். இரண்டு இளைஞர்கள் அவர்களுக்கு குடை பிடித்தார்கள்.

'3 மாசப்புள்ள நமக்காக போராட வந்திருக்கு. நம்மள எவன் என்ன செய்ய முடியும் ? ' னு மைக்ல ஒருத்தர் கேட்டதெல்லாம் தெறி மாஸ்.

இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தின் இனப்பாசத்தையும்,  நாகரீகத்தையும் அறிந்துகொள்ள மெரீனா பக்கம் வாருங்கள்.

அலங்கநல்லூர்  பாலமேடு   ஜல்லிக்கட்டு  அமைப்பினர்  விடுக்கும் ஓர் அறிவிப்பு

 ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பொங்கி எழுந்துள்ள  அரசியல் கட்சியினர் , மற்ற பிரபல அமைப்பினார் , பேட்டி கொடுக்கும் பேச்சாளர்கள்  கல்லூரி  மாணவர்கள் ஆகியோருக்கு ஓர் பணிவான வேண்டுகோள்

 நீங்கள் அனைவரும் ஜல்லிகட்டு நடைபெறும் இடத்திற்கு உடனே  புறப்பட்டு வந்து எங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தால் நாங்கள் ஜல்லிக்கட்டு எற்பாடுகளை உடனடியாக செய்து ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்கிறோம்  ஓர் லட்சம் பேர் ஒவ்வொரு இடத்திலும் பாதுகாப்பு அரணாக இருந்தால்  நீங்களும் நாங்களும் தமிழ் காலச்சாரத்தை காக்க எதையும் தியாகம் செய்ய தயார் என்பதை இந்த நீதிமன்றத்திற்கும் உணர்வுற்ற அரசுக்கும் உலகுக்கும் உணர்த்த முடியும்
 ஆதலால் உண்மையில்  தமிழ் காலச்சாரத்தை காக்க நினைக்கும்  அரசியல்வாதியாக நீங்கள் இருந்தால் உங்கள் தொண்டர் படையை இங்கு அனுப்புங்கள் மாணவ செல்வங்களே நீங்கள் அனைவரும் இங்கு வாருங்கள் காலச்சரத்தை  காக்க புறப்பட்டுருக்கும்   படையே இங்கு வாருங்கள் நீங்கள் இங்கு வந்தால்  உணர்வின் வெளிப்பாடு வெளியில் தெரியும் இல்லையென்றால் தமிழனின் வீரம் டெல்லிக்கு தெரியாது புறப்பட்டு வாருங்கள் பாலமேட்டை நோக்கியும் அலங் நல்லூரை நோக்கியும்  என்று இரு கரம் கூப்பி அழைக்கிறோம்
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா? என்று கேட்க தோன்றும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இச்செய்தியை அனைத்து குரூப்புகளுக்கும் கொண்டு சேர்க்கவும் அத்துடன் இல்லாமல் வீரனாக புறப்பட்டு வாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை கரம் கூப்பி வேண்டுகிறோம்
இப்படிக்கு
ஜல்லிகட்டு அமைப்பினர்
அலங்கநல்லூர்
பாலமேடு